Posts

சிலப்பதிகாரம் _ (கட்டுரைக்காதை)

மலைபுரை மாடம் எங்கனும் கேட்பக் கலையமர் செல்வி கதவம் திறந்தது; *இச் செயல் நேர்மையன்று' என்று, அறதெறியை அவர் கணரக் கூறி அவளை விடுவித்தான். ‘அறியா மக்களினாலே முறைநிலை திரிந்ததால் என் இறைமுறை பிழைத்தது; பொறுத்தல் நும் கடன்' என்று, நீர்குழ்ந்த கழனிகளையுடைய திருந்தங்கால் என்னும் ஊருடளே. மடங்காத விளைவிளையுடைய வயலூரை யும் அவனுக்கு இறையிலி நிலமாகத் தந்தாள் சார்த்திகை கணவளாள வார்த்திகளின் முன்னர், பெரிய நிலமடந்தைக்குத் தன் திருமார்பினை அளித்து, அவளது தணியாத வேட்கையையும் சிறிது தணித்தான் பாண்டியன், நிலைகெழுமிய கூடல்நகரத்து நீண்ட மறுகின், மலையினை யொத்த உயர்ந்த மாடங்கள் எங்கணும் கேட்குமாறு, சுலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் கோயிற்கதவமும், அவ் வேளையில், பேரொலியுடன் திறந்தது. 16. பறை அறைந்தனர் 'சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்; இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும், உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்" என, யானை எருத்தத்து, அணிமுரசு இரீஇக் கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியும் கேள் நீ; "சிறைக் கோட்டங்களைத் திறந்துவிடுங்கள்: எவ...